உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் : International Institute of Tamil Studies

பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை

பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை

இரசவாதம் செய்து இரும்பை பொன்னாக்கும் கலையை கண்டறிந்தவர்கள். சித்தர்கள் உடலைவிட்டு உயிரை பிரித்து கூடுவிட்டு கூடு பாய்ந்த மகாயோகிகள் ஆவர். இவர்கள் மூச்சடக்கி உடலை பறவையாய் ஆக்கி பறந்து பல நாடுகளை பார்த்த மனித விமானங்களாக அதிசயம் செய்தவர்கள். சித்தத்தின் சலணமே அனைத்து தத்துவங்களின் தோற்றம் ஆகும். பிராண வாயுவின் இயக்கமே சித்தத்தின் இயக்கம் என்ற உண்மையை தெரிவித்தவர்கள் சித்தர்கள்.

தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் காணப்படும் நிறைமொழி மாந்தர் என்ற தமிழ்ச்சொல் சித்தர்களையே குறிப்பிடுவதாகும். உலகமே இன்று கொண்டாடும் யோக மார்க்கத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள் யோகக் கலையின் பிதாமகன்கள் சித்புஷர்கள் ஆவார்கள். சித்தி பெற்றவர்கள் சித்தர்கள் ஆவர். சித்தர்கள் மருத்துவம், வானியல், பிரஞ்ச இரகசியம், ஆன்மிகம், சூட்சும இரகசியம், யோகம் எனப் பல்வேறு கோணங்களில் மக்களின் வாழ்வியலை மேம்படுத்திடுவதற்குரிய வழிகளைக் கூறியுள்ளனர்.

சித்தர்கள் சாகாநிலையைப் பெற்றவர்கள். அழியாத உடம்பை பெற்றவர்கள் சித்தர்கள். சித்தர்கள் கண்ட மருத்துவ முறையைப் பற்றி ஆராய்ந்தால் சித்தர்களின் விஞ்ஞான அறிவைக் காணலாம். சித்தர்கள் மனிதகுல நல்வாழ்விற்கு, நோயற்ற நல்வாழ்க்கைக்கு ஆராய்ந்து கண்டு மருத்துவத்தை உலகிற்கு அளித்துள்ளனர். ரசவர்க்கங்களைக் கையாளுதல், உலோக வகைகளை ரசவகைகளால் செய்யும் மருந்து முறைகள் சித்தர்களால் அறிவிக்கப்பட்டதாகும். உலோகங்களையும் தாது வகைகளையும் கொண்டு செய்யப்படும் பஸ்பம், செந்தூரம், திராவகம், கட்டு, கழுங்கு பலவகை முறைகள் அறிந்தவர்கள் சித்தர்கள் ஆவர்.

அலெக்சில் காரல் என்ற நோபல் பரிசு பெற்ற உலக உளவியல் விஞ்ஞானி சித்தர்களைப் பற்றிக் கூறும்போது, உலகிலேயே உண்மையான ஞானிகள் விஞ்ஞானிகள், மெய்ஞானிகள் என்று புகழாரம் சுட்டுகிறார். சித்தர்கள் விண்ணை ஆராய்ந்து, மண்ணை ஆராய்ந்து, உள்ளத்தை ஆராய்ந்து, உண்மையை ஆராய்ந்து அவர்கள் உலக மக்களுக்கு அளித்த ஈடு இணையற்ற பெரும் மிகப் பெரிய கொடையே சித்தர்களின் மருத்துவமாகும்.

சித்தர்கள் பல்லாயிரம் மூலிகைகளில் கற்பமூலிகைகள் 108ஐ தேர்ந்தெடுத்து மனிதகுல நல்வாழ்விற்கு பயன்படும் மருத்துவ முறையை அளித்துள்ளனர். ஒவ்வொரு மனிதனின் இரண்டு கண்கள் ஒன்று தமிழ், இன்னொன்று மருத்துவம். தமிழ் வேறல்ல, த என்பது வல்லினம், மி என்பது மெல்லினம், ழ் என்பது இடையினம். தமிழ் என்பதற்கு விரிவாக்கம் உலகில் எந்த மொழிக்கும் இல்லாத பெருமையாகும். தமிழ் மொழி இலக்கண இலக்கியத்திற்கு பெருமை சேர்க்கின்ற உயர் செம்மொழியாகும். இப்பெருமை மிக்க,

தமிழ்மொழியோடு பிறந்த மருத்துவம்

தமிழ் மொழியோடு வளர்ந்த மருத்துவம்

தமிழ் மொழியை வளர்த்த மருத்துவம்

பார் புகழும் சித்தர்களின் மருத்துவமாகும். என்றைக்கு புல், பூண்டு முளைத்ததோ அன்றைக்கு தோன்றிய மருத்துவம் தோன்றியது. வாலண்டைன் என்ற புகழ்பெற்ற பேராசிரியர், 10 ஆண்டு காலம் உலகின் உணவு முறைப்பற்றி ஆராய்ச்சி செய்தார். உலகில் மிகச்சிறந்த உணவுமுறை தமிழர் கண்ட உணவுமுறை என்று குறிப்பிட்டுள்ளார். உணவே மருந்து, மருந்தே உணவு என்ற பெருமை நம் மருத்துவத்திற்கு மட்டும் உண்டு. இதன் தொண்மைக்கும் மேம்பாட்டிற்கும் பயன்பாட்டிற்கும் ஆணி வேராக திகழ்வது சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மூலிகை மருத்துவமாகும்.

நமது நாட்டில் இயற்கை வளமான தாவரங்கள் 70% விழுக்காடு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

நமது முன்னோர்கள் நிலத்தை பாகுபடுத்தி (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) தாவரங்களின் பெயரைப் பயன்படுத்தினார்கள்.

வெற்றியை வெளிப்படுத்த தாவரங்களின் பெயரைப் பயன்படுத்தினார்கள்.

ஊரின் பெயரால் தாவரங்களின் பெயரைப் பயன்படுத்தினார்கள்.

இசைப் பிரிவில் தாவரங்களின் பெயரைப் பயன்படுத்தினார்கள்.

இசைக்கருவிகளில் தாவரங்களின் பெயரைப் பயன்படுத்தினார்கள்.

ஊரின் பெயர்களை தாவரங்களின் பெயரால் பயன்படுத்தினார்கள்.

பக்தி இலக்கியங்களில் கோவிலின் தலவிருட்சங்களில் தாவரங்களின் பெயரைப் பயன்படுத்தினார்கள்.

நமது நாட்டில் உள்ள 18000க்கும் அதிகமான பூக்கும் தாவரங்களில் ஏறக்குறைய 8700 தாவரங்களை பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தி வந்தனர். மக்கள் நோய்களில் இருந்து விடுபடவும் ஆரோக்கியமான நல்வாழ்விற்கும் சித்தர்கள் மூலிகை மருத்துவத்தைப் பயன்படுத்தினார்கள் என்பது மருத்துவத்திற்கு மட்டுமே உள்ள பெருமையாகும்.

சித்தர்களால் இனம் கண்ட தாவரங்கள் என்ற பெருமை சித்தர்களுக்கும் பண்டைய முன்னோர்களுக்கும் உரிய பெருமை ஆகும். வானமே குடையாக வாழ்ந்து காட்டிய பெருமை தமிழ்க்கூறும் நல்லுலகம் நமது தமிழ்நாடாகும். மரணமில்லா பெருவாழ்வு பெற்ற சித்தர்கள் அவதரித்ததும் தமிழ் நாடாகும். பல சித்தர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து உள்ளனர். இவர்களை பதினெண் சித்தர்கள் என்று சிறப்பாகப் பேசப்படுகின்றனர்.

அகத்தியர் சித்தர்
திருமூலர் சித்தர்
காளாங்கிநாதர் சித்தர்
போகர் சித்தர்
புலிப்பாணி சித்தர்
இராமதேவர் சித்தர்
தேரையர் சித்தர்
மச்சமுனி சித்தர்
கமலமுனி சித்தர்
கோரக்கர் சித்தர்
இடைக்காட்டுச் சித்தர்
அழகண்ணர் சித்தர்
பாம்பாட்டி சித்தர்
குதம்பை சித்தர்
சுந்தரானந்தர் சித்தர்
சட்டைமுனி சித்தர்
புண்ணாக்கிசர் சித்தர்
கருவூரார் சித்தர்

இப்பதினெட்டு சித்தர்களின் பட்டியலில் மாறுபாடுகள் இருப்பது கண்கூடு. பல கல்வியாளர்களால் பலவிதமாகக் கூறப்பட்டுள்ள இப்பதினெண் சித்தர்களின் பட்டியலை இலக்கியங்களின் வாயிலாகக் காணமுடியும்

இவர்களுக்குப் பெருமை சேர்க்கும் நோக்கில், இவர்களின் மருத்துவத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் 18.12.2020 அன்று மேனாள் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் ஐயா அவர்களால் (செ.மு.ஆ.எண்.233சி/2020, நாள்:18.12.2020) அமைக்கப்பட்டது. இதற்காக அவருக்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பதினெண் சித்தர்களின் மருத்துவ ஆய்விருக்கை மேற்கொள்ளும் செயல்பாடுகள்

இதுபோன்ற பலவேறு நோக்கங்களையும் பதினெண் சித்தர்கள் மருத்துவ ஆய்விருக்கை செயல்படுத்த உள்ளது.